நா.நவநாயகமூர்த்தி. அக்கரைப்பற்று: நா.நவநாயகமூர்த்தி, வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, ஜுன் 1995. (அக்கரைப்பற்று: கணேசன் அச்சகம், சாகாமம் வீதி).
viii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.
நூலாசிரியர் திருக்கோவில் -தம்பிலுவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அக்கரைப்பற்று தெற்கு, ப.நோ.கூ.சங்க சமாசத்தின் காசாளராகப் பணியாற்றியவர். இந்நூலில் பண்டைக்காலத்தில் சைவம், இந்து பௌத்த புரிந்துணர்வு, தமிழரிடையே கணபதி வழிபாடு தோன்றிய காலம், சங்ககாலப் புகார்ப் பட்டினத் துறையில் ஈழத்துணவு, பண்டைக்காலத்தில் இமயம் முதல் இலங்கை வரை வாழ்ந்த நாகர் இனம், கோவலன் -கண்ணகி வாழ்ந்த காலம், சங்கமன்கண்டி முதல் தாடகிரி வரை பரவியிருந்த பண்டைய நாகரிகம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற ஆசிரியரின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25538).