12994 – இதயம் துடித்த இருபது ஆண்டுகள்.

இரா.சனார்த்தனம். சென்னை: இரா. சனார்த்தனம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 32 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

உலகளவில் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட தமிழ் ஆர்வலர் இரா. சனார்த்தனம், 9.9.1987அன்று தனது பிறந்த நாளையொட்டி, கடந்த 20 ஆண்டுகளாக ஈழத்தமிழருடன் தான் கொண்டிருந்த உறவையும் தொடர்புகளையும் இந்நூலில் விரிவாகப் பதிவசெய்துள்ளார். தமிழுக்காக பல்வேறு தளங்களில் அவர் பணியாற்றி வந்தார். 1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றிய அவர், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், அரசின் தடையை மீறி அவர் சொற்பொழிவாற்ற முனைந்தபோதுதான், காவல்துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிலும் மின்சாரம் தாக்கியும் 9 பேர் கொல்லப்பட்டனர். அச்சம்பவம் இலங்கை தமிழர் போராட்ட வாலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தமை வரலாறாகும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிராபகரன் உள்ளிட்ட பலரை முதல் முறையாக தமிழகத்துக்கு அழைத்து வந்தவர் சனார்த்தனம் அவர்கள் என்பதும் குறிப்பிடத் தகுந்தது. ஈழ ஆதரவாளரான இவர் தனது மகனுக்கு தந்தை செல்வாவின் நினைவாக ‘செல்வா’ என்றும், மகளுக்கு ‘ஈழச்செல்வி’ என்றும் பெயரிட்டு மகிழ்ந்தவர். 20.2.2013இல் சென்னையில் காலமானபோது அவருக்கு வயது 75. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).

ஏனைய பதிவுகள்

12422 – தாரகை – இதழ் 20:2016.

பாத்திமா நஸீரா நிஜாம், துர்க்கா சுப்பிரமணியம் (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை) 241 பக்கம், புகைப்படங்கள்,

14339 மக்கள் வெளியீடு செய்தல் : நிறுவனத்தை கட்டியெழுப்பும் மனித வளமும் முன்னேற்ற அறிக்கை 1991.

உள்நாட்டலுவல்கள் அமைச்சு. கொழும்பு: பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 71+72+82 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. தமிழ், ஆங்கிலம்,