12996 – இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்.

யமுனா ராஜேந்திரன். சென்னை 600041: பேசாமொழி பதிப்பகம், 30-யு, கல்கி நகர், கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600077: மணி ஆப்செட்).

109 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5 x 14 சமீ.

இலங்கையின் போர்க்குற்றமும் மனித உரிமைமீறல்களும் குறித்து உலகெங்கிலும் வெளியான 17ஆவணப் படங்களைப்பற்றிய ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். எல்லைகளைக் கடக்கும் ஆவணப்படக் கலைஞர்கள், இலங்கையின் கொலைக்களங்கள், ராஜபக்சேக்களின் ஆபாச நடனம், ஒப்புக்கொள்ளக் கோரப்படும் பொய்கள், பிரியம்வதாவின் இனக்கொலை சாட்சியம், மிகுயா சௌத்ரியின் கோபம், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், யுத்தத் தவிர்ப்பு வலயம், எனது மகள் பயங்கரவாதி, சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை சகோதரி, விடுதலைப் போராட்டம் என்பது பயங்கரவாதம் இல்லை, மௌனமாக்கப்பட்ட குரல்கள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இறுதியில் நூலின்உருவாக்கத்துக்குத் தூண்டுதலாகவிருந்த அந்தப் பதினேழு ஆவணப்படங்கள் பற்றிய தகவல் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12674 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2008.

. இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, பிரிவேனா

14959முத்திரையிற் பண்டிதமணி: முத்திரை வெளியீட்டு விழா மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (8), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19

12308 – கல்விப் பணியில் நாவலர்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). iv, 71 பக்கம்,

14709 புத்தரின் கடைசிக் கண்ணீர்.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஜனவரி 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: