யமுனா ராஜேந்திரன். சென்னை 600041: பேசாமொழி பதிப்பகம், 30-யு, கல்கி நகர், கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600077: மணி ஆப்செட்).
109 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5 x 14 சமீ.
இலங்கையின் போர்க்குற்றமும் மனித உரிமைமீறல்களும் குறித்து உலகெங்கிலும் வெளியான 17ஆவணப் படங்களைப்பற்றிய ஆசிரியரின் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். எல்லைகளைக் கடக்கும் ஆவணப்படக் கலைஞர்கள், இலங்கையின் கொலைக்களங்கள், ராஜபக்சேக்களின் ஆபாச நடனம், ஒப்புக்கொள்ளக் கோரப்படும் பொய்கள், பிரியம்வதாவின் இனக்கொலை சாட்சியம், மிகுயா சௌத்ரியின் கோபம், தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள், யுத்தத் தவிர்ப்பு வலயம், எனது மகள் பயங்கரவாதி, சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை சகோதரி, விடுதலைப் போராட்டம் என்பது பயங்கரவாதம் இல்லை, மௌனமாக்கப்பட்ட குரல்கள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இறுதியில் நூலின்உருவாக்கத்துக்குத் தூண்டுதலாகவிருந்த அந்தப் பதினேழு ஆவணப்படங்கள் பற்றிய தகவல் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.