பகீரதன். சென்னை 17: பாரதி பதிப்பகம், தியாகராய நகரம், 1வது பதிப்பு, 1959. (சென்னை: நவபாரத் பிரஸ்).
272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ.
இலங்கையின் மலையகம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் பிரயாணம்செய்து தனது அனுபவத்தினை இந்நூலில் பிரயாண இலக்கியமாக வழங்கியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பகீரதன் எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும் அறியப்பட்டவர். நாவல்கள், சிறுகதைகள் பயணக்கட்டுரைகள் பலவற்றையும் எழுதியவர். விடுதலைப் போராட்ட வீரரான பகீரதன் தொடங்கிய ‘சத்திய கங்கை’ என்ற இதழ் தொடர்ந்து 33 ஆண்டுகள் வெளிவந்தது. இவர் 18 ஆண்டுகள் கல்கியில் துணையாசிரியராகவும், 14 ஆண்டுகள் ‘ஓம் சக்தி’ மாத இதழில் ஆசிரியராகவும், 4 ஆண்டுகள் ‘கிசான் வேர்ல்ட்’ என்ற ஆங்கில வேளாண்மை இதழில் இணையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 14 நாவல்கள், 4 சிறுகதைத் தொகுதிகள் என்பவற்றுடன் தாம் சென்ற இடத்தைப் பற்றியெல்லாம் அவர் எழுதிய எண்ணற்ற பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை. கல்கியில் வெளிவந்த இவருடைய பயணக் கட்டுரைகளை வாசித்த அறிஞர் அண்ணாதுரை, ‘திராவிட நாடு’ இதழில் இவரது எழுத்தை மனமாரப் பாராட்டினார். பகீரதனின் நூல்களில் மிகுந்த மதிப்போடு பேசப்பட்ட நூல்களென ‘சர்தார் வேதரத்தினத்தின் வாழ்க்கை வரலாறு’, ‘ஜோதி வழியில் வள்ளலார்’, ‘முல்லை வனத்து மோகினி’, ‘கல்கி நினைவுகள்’ முதலியவற்றை குறிப்பிடலாம். எழுத்தாளர் பகீரதன், 7.2.2001 அன்று காலமானார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19462).