கு.செல்வராஜு (பதிப்பாசிரியர்). கோலாலம்பூர்: ஜெயபக்தி வெளியீடு, 28&30,
Wisma Jaya Bakti, Jalan Cenderuh 2, Batu 4, Jalan Ipoh,51200 KL,1வது பதிப்பு, 1994. (: PercetakanAdvanco Stn Bhd.,23 Jalan Segambut Selatan, 51200 KL).
(64) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 13 சமீ.
மலேசியாவின் இலங்கைத் தூதராக திரு. செ.இராஜதுரை பணியாற்றிய 1990-1994 காலகட்டத்தில் அவர் பணிமாற்றம் பெற்றுச் செல்கையில் வெளியிடப்பட்ட நூல். அவரது பணிகளை நயந்து போற்றிய மலேசியத் தமிழர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல்வகையிலும் அமைந்த படைப்பாக்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21998).