13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

கணினி நிகழ்ச்சி வடிவமைப்பு மொழிகள் பற்றிய நூல். அறிமுகம் என்ற முதலாவது பிரிவில் கணினி உயர்நிலை மொழிகளின் அவசியம், கணினி உயர்நிலை மொழிகளின் அறிமுகம், சி++கொம்பைலர்கள், சிூூ மொழிப் புறோகிராம் அமைப்பு, சி++ மொழிப் புறோகிராம் அடிப்படைகள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் இயல்களில் மாறிகளும் மாறிலிகளும் (Variables & Constants), ஒப்பரேற்றர்கள் (Operators), கட்டுப்பாட்டுக் கட்டளைகள் (Control Statements), பங்ஷன்கள் (குரnஉவழைளெ), அறேக்கள்- ஸ்ட்ரக்ஷர்கள் மற்றும் பொயின்ரர்கள் (Arrays, Structures & Pointers), ஒப்ஜெக்ட் ஓரியன்டட் புறோகிராமிங்கின் (Object Oriented Programmes – OOP) விளக்கங்களும் பிரயோகங்களும், டெம்பிளேற்றுகள் (Templates), பைல்கள் (Files), பிழைகளும் பிழையேந்திகளும் (Errors and Exception Handling), நாமே உருவாக்கிக்கொள்ளும் ஹெடர் பைல்கள் (User Defined Header File) ஆகிய பாடங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் உதாரணப் புரோகிராம்களும் வெளியீடுகளும், ‘அஸ்க்கீ ” அட்டவணை (ASCII Table), விஷவல் சி++ எடிட்டரில் சி++ மொழிப் புரோகிராம்களைச் செயற்படுத்தல், சுட்டி (Index)) என்பன தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12450).

ஏனைய பதிவுகள்

13234 திருநாவுக்கரசர் அருளியவற்றுள் அறுபது பாசுரங்கள் (இலகுநடைப் பதவுரை).

மு.தியாகராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புச் சிவத்திரு மன்றம், 32B, ஸ்ரீ சுமங்கல வீதி, இரத்மலானை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை). 56

16618 அவள் ஒரு பூங்கொத்து.

தேவகி கருணாகரன். சென்னை 600014: சிந்தன் புக்ஸ், 327/1, திவான் சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 145 பக்கம், விலை: இந்திய ரூபா 150.,