13006 நூல்தேட்டத்தில் ஊடகத்துறையும் நூலகத்துறையும்: ஒரு துறைசார் வாசிப்புக்குரிய வழிகாட்டி.

என்.செல்வராஜா. லண்டன்: ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், ஐக்கிய இராச்சியம், இணை வெளியீடு, லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv, 176 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-9930143- 6-9.

இந்த நூல்விபரப்பட்டியலானது ஊடகவியல்துறையையும் நூலகவியல்துறையையும் தமது தொழில்துறைகளாகத் தேர்வுசெய்ய விரும்புவோருக்கு ஒரு பருந்துப் பார்வையை வழங்குகின்றது. ஊடகவியல், நூலகவியல் துறைகளில் உள்ளவர்கள் தத்தமது துறைகளில் எத்தகைய பிரசுரங்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளும் வசதியினை இந்நூல்விபரப் பட்டியல் அவர்களுக்கு வழங்குகின்றது. மேலும் இப்பட்டியலில் ஊடக எழுத்தாற்றல் என்ற பிரிவில் கருத்தோவியங்கள் (கார்ட்டூன்கலை), ஓவியக்கலை அறிவு, புகைப்படக் கலை அறிவு ஆகியவை தொடர்பாக இலங்கையில் வெளிவந்த நூல்கள் பற்றிய தகவல்களையும் தொகுப்பாசிரியர் வழங்கியுள்ளார். ஊடகவியல்துறையுடன் நெருங்கிய தொடர்புள்ள இத்தகைய துறைகளையிட்டும் ஊடகவியல்துறை மாணவர்கள் பாடத்திட்டத்துக்கும் மேலாக, மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதும் அவர்களின் செய்தி அறிக்கையிடல்சார்ந்த பார்வையை விரிவாக்க உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்

14045 ஞான மண்டலம் ஆலயம் வஜனாம்ருதம்.

சுவாமி கெங்காதரானந்தா. சென்னை 600005: குமரன் வெளியீடு, 13/2, கஜபதி தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36, தெற்குச் சிவன்கோவில் தெரு, கோடம்பாக்கம்). 176 பக்கம்,

14875 காதம்பரீ: இலக்கிய நூல்.

செல்லத்துரை கலாவாணி. யாழ்ப்பாணம்: செ. கலாவாணி, வாணி அகம், சிறுப்பிட்டி வடக்கு, 1வது பதிப்பு, ஆடி 2012. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). 64 பக்கம், சித்திரங்கள், விலை:

12395 – சிந்தனை: தொகுதி I இதழ் ; 3,4 (புரட்டாதி, மார்கழி 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்கழி 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). 63 பக்கம்,

14526 மழலை ஓவியங்கள்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN:

12800 – காண்டாவனம்:சிறுகதைகள்.

சண்முகம் சிவலிங்கம். ஐக்கிய அமெரிக்கா: வெளியீட்டுப் பிரிவு, iPMCG Inc வெளியீடு, 3311, Beard Road, Fremont, CA 94555, 1வது பதிப்பு, மார்கழி 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). (17), 18-249 பக்கம்,

12608 – இயைபாக்கமும் ஒரு சீர்திட நிலையும்: உயிரியல் புதிய பாடத்திட்டம்.

வீ.ச.சிவகுமாரன். கொழும்பு 6: வேதா சிவகுமாரன், 6/1, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு: கிரிப்ஸ்). 128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 21.5×15 சமீ., ISBN: