13006 நூல்தேட்டத்தில் ஊடகத்துறையும் நூலகத்துறையும்: ஒரு துறைசார் வாசிப்புக்குரிய வழிகாட்டி.

என்.செல்வராஜா. லண்டன்: ஐரோப்பியத் தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், ஐக்கிய இராச்சியம், இணை வெளியீடு, லண்டன்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியம், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்ச் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv, 176 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-9930143- 6-9.

இந்த நூல்விபரப்பட்டியலானது ஊடகவியல்துறையையும் நூலகவியல்துறையையும் தமது தொழில்துறைகளாகத் தேர்வுசெய்ய விரும்புவோருக்கு ஒரு பருந்துப் பார்வையை வழங்குகின்றது. ஊடகவியல், நூலகவியல் துறைகளில் உள்ளவர்கள் தத்தமது துறைகளில் எத்தகைய பிரசுரங்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளும் வசதியினை இந்நூல்விபரப் பட்டியல் அவர்களுக்கு வழங்குகின்றது. மேலும் இப்பட்டியலில் ஊடக எழுத்தாற்றல் என்ற பிரிவில் கருத்தோவியங்கள் (கார்ட்டூன்கலை), ஓவியக்கலை அறிவு, புகைப்படக் கலை அறிவு ஆகியவை தொடர்பாக இலங்கையில் வெளிவந்த நூல்கள் பற்றிய தகவல்களையும் தொகுப்பாசிரியர் வழங்கியுள்ளார். ஊடகவியல்துறையுடன் நெருங்கிய தொடர்புள்ள இத்தகைய துறைகளையிட்டும் ஊடகவியல்துறை மாணவர்கள் பாடத்திட்டத்துக்கும் மேலாக, மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதும் அவர்களின் செய்தி அறிக்கையிடல்சார்ந்த பார்வையை விரிவாக்க உதவுகின்றது.

ஏனைய பதிவுகள்