13008 நூல்தேட்டம் தொகுதி 13.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள்இ இணை வெளியீட்டாளர்இ கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்இ 39இ 36ஆவது ஒழுங்கைஇ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 626 பக்கம்இ விலை: ரூபா 2000., அளவு: 21.5X15.5 சமீ., ISBN: 978-955-659-635-9.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ்நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதின்மூன்றாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டுஇ பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 12001-13000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும், முன்னைய தொகுதியின் பதிவுகளுக்கான மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

மேலும் பார்க்க: 13934

ஏனைய பதிவுகள்

14894 கற்பகதேவி: பெருங்கதையிலோர் சிறுகதை.

ந.மயூரரூபன். பருத்தித்துறை: எழினி வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. அமரர் திருமதி கற்பகதேவி நவரத்தினம் (28.4.1945-22.3.2017)

16891 ஸ்ரீமாவோ: உலகின் முதலாவது பெண் பிரதமரைக் கௌரவித்தல்.

திஸ்ஸ ஜயதிலக்க (ஆங்கில மூலம்), எஸ்.துரைராஜா, எஸ்.சிவகுருநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: பண்டாரநாயக்க அரும்பொருட் காட்சியகக் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக்க மாவத்த, 1வது பதிப்பு, 2016. (ஒறுகொடவத்தை: குணரத்ன