13009 கருத்தூண்: 10ஆவது ஆண்டு சிறப்பு மலர் 2005-2015.

க.சௌந்தரராஜ சர்மா, தெ.மதுசூதனன் (மலராசிரியர்கள்). கொழும்பு 11: நூலக விழிப்புணர்வு நிறுவகம், சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park).

xxii, 358 பக்கம்இ புகைப்படங்கள்இ தகடுகள்இ விலை: ரூபா 1000., அளவு: 25.5X18 சமீ., ISBN: 978-955-685-039-0.

வெளியீட்டுரைகள், வாழ்த்துரைகளுடன், நூலக விழிப்புணர்வு நிறுவனத்தின் வரலாற்றுத் தகவல்களும், அ.ஸ்ரீகாந்தலட்சுமி, ஏ.சி.அன்வர் சதாத், ஜெயலட்சுமி சுதர்சன், விசாகரூபன் மைதிலி, சுகந்தி சதாசிவமூர்த்தி, சபாரட்ணம் தனபாலசிங்கம், ம.இந்திராணி, வி.பிரபாகர், செல்வராணி பாக்கியநாதன், கு.சரவணன், இ.மதிகரன், அ.சுபாசினி, சி.கேதீஸ்வரன், க.ஜெயசோதி ஆகியோரின் நூலகம் சார்ந்த கட்டுரைகளும், தகவல் தொழில்நுட்பம், ஊடகங்கள் சார்ந்த கட்டுரைகளும், பரிசுக் கட்டுரைகள், கவிதைகளும், சிறுகதைகளும், வாசிப்புஇ வாசகன், நூல் பற்றிய மனப்பதிவுகளும், அனுபவங்களும் உள்ளடங்கியுள்ள இம்மலரில் மறைந்த நூலகர்களான சி.முருகவேள்இ எஸ்.ரூபசிங்கம்இ கலைவாணி திருநாவுக்கரசுஇ கே.செல்லையாஇ எஸ்.எம்.கமால்தீன்இ வே.இ.பாக்கியநாதன்இ எஸ்.ஜோன் செல்வராஜாஇ எம்.பீ.எம்.பைரூஸ்ஆகியோர் பற்றிய வாழ்வும் பணிகளும் பற்றிக் கூறிடும் கட்டுரைகளும்இ யாழ்ப்பாணப் பெட்டக நிறுவுநர் மா.அருள்சந்திரன், வல்வை பா.மீனாட்சிசுந்தரம், அரும்பொருள் சேகரிப்பாளர் பாலச்சந்திரன் ஜெகதீசன், சித்திவிநாயகர் நூலக நிறுவுநர் இ.கணேசராஜா ஆகிய ஆவணக்காப்பா ளர்களின் நேர்காணல்களும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Aviator 25 Rodadas Grátis Sem Armazém

Content Requisitos criancice alta criancice bônus sem depósito – Crown Of Fire Casino móvel Nine Casino – Bônus Sem Armazém – 20 Giros Acostumado abicar