13012 யாழ்ப்பாணப் பொது நூலகம்: அன்றும் இன்றும்.

ரூபவதி நடராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 217 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-659-618-2.

யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாறு எரிப்புக்கு முன்னரும் பின்னருமான நிலைமைகள் பற்றி இந்நூல் விளக்குகின்றது. நூலகங்களின் வரலாறு, யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் உதயம், யாழ்ப்பாண மாநகரசபையின் உருவாக்கமும் பொது நூலகத்தின் வளர்ச்சியும், பட்டதாரி நூலகரின் நியமனமும் நவீன நூலக உலகின் களமுனையும், யாழ்ப்பாணப் பொது நூலகமும் அதன் சேவைப் பிரிவுகளும், யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் எனது இணைவு, யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் எரிப்பு, இழப்பின் பெறுமதி, உலக வரலாற்றில் தொடரும் நூலக எரிப்புகள், சாம்பலில் துளிர்த்தது எங்கள் பொது நூலகம், நூலகத்தின் புனர்நிர்மாணம், நூலகத்தை மீண்டும் நெருங்கியது ஆபத்து, பிராயச்சித்தம் தேடும் வெண்தாமரை இயக்கம், புதுப்பொலிவு கண்டுவரும் நவீன நூலகம், நுலகத்தின் நூற்சேர்க்கைச் செயற்பாடுகள், நவீன நூலக ஊழியர்-வாசகர் பணிகளும் பொறுப்புகளும், தகவல் யுகத்தில் பயணிக்கும் யாழ். நூலகம், தற்கால யாழ்ப்பாணப் பொது நுலகத்தின் கிளைகள், யாழ்ப்பாணப் பொது நுலகம் தொடர்பான நூல்கள் ஆகிய 20 தலைப்புகளில் இந்நூல் விரிந்துள்ளது.

மேலும் பார்க்க: 14A24, 13006

ஏனைய பதிவுகள்

Davinci Diamonds Slot Hack

Content Dynamite Digger Slot pokie – Get Up To 1000, 150 Free Spins Powerbucks Wheel Of Fortune Shimmering Sapphires What Kind Of Game Is Da Vinci