நடராசா பிரபாகர், கல்பனா சந்திரசேகர் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இல. 84, கல்லூரி வீதி, நீராவியடி, 1வது பதிபபு, 2018. (அச்சகவிபரம் தரப்படவில்லை).
(4), iv, 49 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையில் இரு வாரங்களுக்கு ஒரு முறை விஞ்ஞான அறிவியல்சார் கட்டுரைகளை பிரசுரித்து மக்களையும் மாணவர்களையும் அறிவியல்ரீதியில் தெளிவடையச் செய்யும் அரும்பணியை யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் ஆவணி 2009 முதல் மேற்கொண்டு வந்தது. இக்கட்டுரைகள் தொடர்பான தேடலை மேற்கொள்ளும் வாசகர்களுக்கு உதவும் வகையில் கட்டுரைகளுக்கான சுட்டியொன்று தயாரிக்கப்பட்டது. ஆவணி 2009 முதல் மார்கழி 2017 வரையிலுமான காலப்பகுதியில் வெளிவந்த 137 கட்டுரைகளுக்கான சுட்டி இதுவாகும். கட்டுரைகளை அணுகுவதற்கு இலகுவாக ஆசிரியர் சுட்டி, தலைப்புச் சுட்டி, விடயச் சுட்டி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொருள் வகுப்புப் பகுதியானது பகுப்பாக்க அடிப்படையிலும், ஆசிரியர் சுட்டி, தலைப்புச் சுட்டி, விடயச் சுட்டி என்பன அகரவரிசைப்படியும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: 14A36