13016 இணைகரம்: மாணவர் சிறப்பிதழ்.

வி.கே.ரவீந்திரன் (இதழாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவுச் சபை, பயனியர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(13), 114 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 21×14 சமீ.

மட்டக்களப்பு மாவட்டக் கூட்டுறவு சபையின் சஞ்சிகையான இணைகரம் தனது இரண்டாவது இதழை ஜுலை 2001இல் (கரம் 1, கதிர் 2) மாணவர் சிறப்பிதழாக வெளியிட்டது. இவ்விதழில் கே.தம்பையா, எம்.எம்.மஃறூப் கரீம், ஆரையூர் இளவல் ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகளும், மு.ஹ.சித்திவாஸ்மியா, அ.ற.ஹஜானியா ஆகிய மாணவர்களின் பரிசுக் கட்டுரைகளும், சி.கோணேஸ்வரன், ந.நல்லராசா, க.கனகசுந்தரம் ஆகியோரின் கட்டுரைகளும், மட்டக்களப்பு இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தரும் எழுத்தாளருமான ஓ.கே.குணநாதனின் நேர்காணலும், மண்டூர் அசோகா, சி.கனகசூரியம், ஆ.கு.கு.முஜிபா ஆகியோரின் சிறுகதைகளும், பிரம்மஸ்ரீ காந்தன் குருக்களின் சிறப்புக் கவிதை உள்ளிட்ட கலாசூரி வெ.விநாயகமூர்த்தி, ம.கிரிசாந்தினி, எருவில் கலிங்கன், மு.மயூரன், மண்டூர் ராம், செ.பாக்கியநாதன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32276).

ஏனைய பதிவுகள்

12245 – இலங்கை மத்திய வங்கி: பொருளாதார நிலை 1997.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம்). (6), 89

12413 – சிந்தனை தொகுதி XIV, இதழ் 2 (ஜுலை 2004).

கார்த்திகேசு குகபாலன் (இதழாசிரியர்), சோ.கிருஷ்ணராசா (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). 129 பக்கம்,

14959முத்திரையிற் பண்டிதமணி: முத்திரை வெளியீட்டு விழா மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (8), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19

14404 பாட்டும் விளையாட்டும்(கிராமியச் செல்வங்கள்).

வெற்றிமகன் (இயற்பெயர்: வெற்றிவேல் விநாயகமூர்த்தி). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம்). (12), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12491 – பயிலுனன்: பயிற்சி ஆசிரியர் நினைவுமலர் 1991-1993.

மலர்க் குழு. கொழும்பு 12: தொலைக்கல்வி மத்திய நிலையம் (201), பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 2: டெக்னிக்கல் பிரின்டர்ஸ், 66, வக்சோல் வீதி). (132) பக்கம்,

12020 – அகமலர்ச்சி.

சுவாமி சின்மயானந்தா (ஆங்கில மூலம்), பிரமச்சாரி வியக்த சைதன்யா (தமிழாக்கம்). கொழும்பு 3: சின்மயா மிஷன், எண்.15, மைல்போஸ்ட் அவென்யூ, 1வது பதிப்பு, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்