13021
அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017. ந.பேரின்பநாதன் (மலராசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்இ 681இ காங்கேசன்துறை வீதி).
201 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 23.5×18.5 சமீ.
புங்குடுதீவில், மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த அம்பலவாணர் கலையரங்கம் 15.04.2017 சனிக்கிழமை காலை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட வேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பிதழ். மலர்க்குழுவில் கா.குகபாலன், ச.சதாசிவம், த.இரத்தினராசா, ந.தர்மபாலன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். பகுதி ஒன்றில் ஆசிச் செய்திகளும், பகுதி இரண்டில் வாழ்த்துச் செய்திகளும், பகுதி மூன்றில் கலையரங்க நிர்மாணக் குழுவினரின் கருத்துரைகளும், பகுதி நான்கில் பல்வேறு கட்டுரைகளும், பகுதி ஐந்தில் 1977ஆம் ஆண்டு அம்பலவாணர் திறந்தவெளியரங்கு திறப்புவிழாவின்போது வெளியிடப்பட்ட மலரில் உள்ளடங்கிய விடயங்களின் தேர்ந்த தொகுப்பும், பகுதி ஆறில் நன்றி நவிலலும் இடம்பெற்றுள்ளன. கட்டுரைப் பிரிவில், அறக்கொடை நிறுவனமயமாக்கப்படுதல் (சி.கனகலிங்கம்), வெளிநாடுகளிலும் உள்ளுரிலும் புங்குடுதீவு மக்கள்- சில அவதானிப்புகள் (ந.பேரின்பநாதன்), புங்குடுதீவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் பற்றிய கள ஆய்வு (க.ஸ்ரீதரன்), புங்குடுதீவுக்குப் பாதையமைத்த வாணர் சகோதரர்கள் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), புங்குடுதீவு அபிவிருத்தி முறைமைகள் தொடர்பான திட்டங்கள் (பொன்.ஜமுனாதேவி), புங்குடுதீவு போக்குவரத்தும் வாணர் தாம்போதியும் (தம்பிஐயா தேவதாஸ்), வாணர் சகோதரர்கள்: சுயநலம் தொற்றாப் பொதுநலவாதிகள் (மு.நேமிநாதன்), Two great Sons of Pungudutivu-Vanar Brothers (என்.கே.மகாலிங்கம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.