திக்குவல்லை கமால், சுதாராஜ், மேமன்கவி. கொழும்பு: நல்லிணக்கத்துக்கான நண்பர்கள், 1வது பதிப்பு, 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாஸ பிளேஸ்).
32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
இலங்கையின் பிரபல சிங்கள வெளியீட்டு நிறுவனமான கொடகே புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் சிரிசுமண கொடகேயின் இலங்கைத் தமிழ் வளர்ச்சிக்கான பங்களிப்பு பற்றிய மூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது. திக்குவல்லை கமால் எழுதி மல்லிகை (இதழ் 366இ நவம்பர் 2009)அட்டைப்பட அதிதிக் கட்டுரையாக வெளிவந்த ‘கொடகே-இலக்கிய வளர்ச்சியின் இணையற்ற பங்காளன்”, சுதாராஜ் எழுதிய ‘தேசபந்து சிரிசுமண கொடகேயும், தேசிய ஒருமைப்பாடும்”, மேமன்கவி எழுதிய ‘இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு சிரிசுமண கொடகே ஆற்றிய பங்களிப்பு” ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக 2009 முதல் 2018வரை வழங்கப்பட்ட கொடகே வாழ்நாள் சாதனை விருதாளர்களின் பட்டியல், 2009 முதல் 2017 வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட ‘கொடகே தேசிய சாகித்திய விழா விருது” பெற்ற நூல்களினதும் அவற்றின் ஆசிரியர்களினதும் பட்டியல் என்பன இணைக்கப்பட்டுள்ளன.