13026 இலங்கையில் ஊடகவியல்.

தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச் செட்டித் தெரு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: சன் பிரின்டெக்).
x, 100 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-7252-01-8.

நூலாசிரியர் த.தேவதாஸ் யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஓய்வுநிலைஆசிரியரான இவர், இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும், ரூபவாகினி தொலைக்காட்சிச் சேவையில் பேட்டி காண்பவராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறைப் பகுதியில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். இலங்கையின் பத்திரிகையியல் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் இந்நூலில் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள், முஸ்லிம் அறிஞர்கள் ஆரம்பித்த பத்திரிகைகள், பிராந்தியப் பத்திரிகைகள், இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகைகள், சிங்களப் பத்திரிகைகள், இலங்கையில் வானொலிச் சேவை, இலங்கையில் தொலைக்காட்சிச் சேவை, இலங்கையில் தமிழ்த் திரைப்படங்கள் ஆகிய எட்டு கட்டுரைகளை தொகுத்துத் தந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்