13027 செய்தி நடத்துனர் பணியின் அடிப்படைகள்.

ரூபன் மரியாம்பிள்ளை. யாழ்ப்பாணம்: பிஷப் சவுந்தரம் மீடியா சென்டர், இல. 891, ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி).
165 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-1395-06-03.

செய்தி நடத்துனர் (News Anchoring) பற்றியும் அவர் எதிர்கொள்ளும் சவால்கள், பணிகள் பற்றியும் இந்நூல் விபரிக்கின்றது. 1. தொலைக்காட்சி செய்தி நடத்துனர் பணி கடந்த ஒரு தசாப்த காலத்தில் வேகமாக வளர்ந்துள்ளது, 2. தொலைக்காட்சி செய்தி நடத்துனரின் பணியும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரின் பணியும் முற்றிலும் வேறுபட்டது, 3. செய்தி நடத்துனர் செய்தித்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பங்கேற்க வேண்டிய இன்றைய நிலையில் பல சவால்களை எதிர்நோக்குகின்றார், 4. செய்தி நடத்துனரின் ஆடைகள் அவரின் ஆளுமைக்கு வலுச்சேர்க்கின்றன, 5. இன்றைய நவீன 24 மணிநேர செய்தி நடத்துனர் பணியில் முக்கிய இடம்பெறுவது ரெலிப் புரொம்டர் கருவியாகும், 6. வெற்றிகரமான ஒரு செய்தி நடத்துனரின் குணாதிசயங்கள், கடின உழைப்பு-இடைவிடாத முயற்சி-நீண்ட தேடல்-நிறைந்த படிப்பு-நீடியஅனுபவம் என்பனவாகும், 7. செய்தி நடத்துனர் தமது பணியை பல்வேறுபட்ட நிலைகளில் ஒரே நேரத்தில் ஆற்ற அழைக்கப்படுகிறார், 8. பல்வேறு களங்களில் இருந்து ஆற்றும் செய்தி நடத்துனர் பணி, 9. நடத்துனர் பணியானது செய்தி அறிவிப்பிற்கு மட்டுமன்றி ஊடகத்தின் பல துறைகளுக்கும் இன்று பரவிச் சென்றுள்ளது, 10. செய்தி நடத்துனர் பணியில் மேலதிக தகவல்களையும் தரவுகளையும் பெற நேர்காணல்கள் துணைசெய்கின்றன, 11. வெற்றியான நடத்துனர் பணியின் இரகசியங்கள் ஆகிய பதினொரு அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்