13028 சொல்லும் செய்திகள்.

வி.என்.மதிஅழகன். சென்னை 600 002: காந்தளகம், 68, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (சென்னை 600 002: கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியம், காந்தளகம், 68, அண்ணா சாலை).
144 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 24X18 சமீ., ISBN: 978-81-897-0869-6.

முகவுரை (ரி.ஜி.பாலேந்திரா), அணிந்துரை (யூ.எல்.யாக்கூப்), வாழ்த்துரை (பி.விக்னேஸ்வரன், யதார்த்தா, கி.பொன்னேஸ்வரன், பவா சமத்துவன்), ஆசிரியர் உரை ஆகியவற்றுடன் தொடரும் இந்நூல், கனவு கண்டேன் நான் கனவு கண்டேன், ஊடகவியலாளரின் வெற்றிக்கொடி, வாசிக்க இலகுவாக இல்லையா மாற்றி எழுதுங்கள் யோசித்து, எடுத்துக் கொடுக்கும் எடுப்பான வசனத் தொடுப்பு, சொல்ல வந்த செய்தி என்ன?, இலத்திரனியல் ஊடகச் செய்திப் பரிமாற்றத்தில் இக்கால நடைமுறைகள், எளிமையாகச் சொன்னால் இலகுவாக விளங்கும், செய்தி ஒலிபரப்பில் பங்காளித்துவம், தமிழ் மொழியின் பயன்பாட்டு வழக்கில் மாற்றத்தை உருவாக்கும் இலத்திரனியல் ஊடகங்கள், உச்சரிப்பில் எச்சரிக்கை அவசியம், கேட்கும் விதத்தில் கேட்டால் கிடைக்கும் பதில் அச்சொட்டாக, சிறப்பான நிருபரின் பொறுப்பான தேடல், செய்தியின் பின்னணியில், தரமான மொழிபெயர்ப்பில் வேகம் தரம் யோகா ஆகிய 15 தலைப்புகளில் ஊடகவியலாளர் வி.என். மதிஅழகன் அவர்களின் அனுபவப் பகிர்வினை இந்நூல் கொண்டுள்ளது. இறுதியில் ‘தமிழ் ஊடகத் துறையின் தரமும் எதிர்காலமும்” என்ற தலைப்பில் சங்கரசிகாமணி பகீரதன் எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Dolphin Reef Ports

Content The Big Easy slot free spins | Free Twist Every day Look at-in the Extra Well-known Pages Win a call for a couple of