13029 தமிழ் இதழியல் நோக்கும் போக்கும்: பன்னாட்டு இதழியல் கருத்தரங்க ஆய்வுக்கோவை.

தெ.மதுசூதனன், நந்தவனம் சந்திரசேகரன், தி.நெடுஞ்செழியன், உ.பிரபாகரன், (பதிப்பாசிரியர்கள்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, 2018. (திருச்சி: இனிய நந்தவனம் பதிப்பகம்).
96 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-936664-2-5.

கொழும்புத் தமிழ்ச் சங்கம், இனிய நந்தவனம் திங்கள் இதழ், மலேசியா-கோலாசிலாங்கூர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், தமிழ்நாடு சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் ஆகியவை இணைந்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 2018 பெப்ரவரி 18 முதல் 21 வரை நடத்திய பன்னாட்டு இதழியல் கருத்தரங்கையொட்டிச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இவ்வாய்வுக்கோவை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முத்துக்கமலம் இணைய இதழின் தமிழ்ப்பணி (அ.இளவரசி முருகவேல்), தமிழ் இதழியல் வரலாற்றில் முதல் பெண் ஆளுமை திருமதி ரூத் (1887) அம்மையார் (மு.சு.கண்மணி), தினமணி தமிழ்மணியின் நோக்கும் போக்கும் (பி.கலைமணி), தமிழ் இதழியலாளர்களும் ஒளிரும் இராசகோபுர தீபமும்: ஒரு ஒப்பீட்டுப் பார்வை (ர.சக்திவேல்), நவீன விருட்சம்-இதழ் அறிமுகம் (கி.சுமதி), காலச்சுவடு இதழின் நோக்கும் போக்கும் (இரா.செல்வமீனா), சிறுவர் இதழ் பெரியார் பிஞ்சு நோக்கும் போக்கும் (தி.நெடுஞ்செழியன்), தந்தை பெரியாரின் இதழியல் பணிகள் (உ.பிரபாகரன்), மகளிர் இதழ்களின் நோக்கும் போக்கும் (பா.வேலம்மாள்), அறுபது ஆண்டுகால பொக்கிஷம்: தமிழ் நேசனின் மெர்தேகா மலர்-1957, ஒரு பார்வை (குணநாதன் ஆறுமுகம்), இதழியல் சமூகத்தில் காணப்படும் நிலை (ப்ரீயமதா பயஸ்) ஆகிய கட்டுரைகளை இம்மலர் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

Unibet Pony Race acca boost

Blogs Unibet Acca Insurance policies Offers Admirers a big Hand | davis cup live How come Acca Insurance Functions? Mine the brand new Unibet Acca