13031 பொதுமக்கள் நம்பிக்கையை மீள் கட்டியெழுப்புதல்: இலங்கையில் ஊடகத்துறை, ஊடகத் தொழில் தொடர்பான மதிப்பீடு.

சி.ரகுராம். கொழும்பு: ஊடக மறுசீரமைப்புகளுக்கான செயலகம், 1வது பதிப்பு, மே 2016. (பன்னல: மஜெஸ்டிக் பிரிண்ட் ஷொப்).
xx, 304 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

ஊடகத்துறை, ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளோர், ஊடகப் பரிந்துரைக் குழுக்கள் ஆகியன பாரிய அளவில் பங்கெடுப்பாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பரந்தளவிலான கலந்தாலோசனைகள் மூலம் தயாரிக்கப்பட்ட அறிக்கை இதுவாகும். பயன்மிக்க நிலைமைப் பகுப்பாய்வினை இவ்வறிக்கை வழங்குவதோடு, கொள்கைரீதியான நெறிப்படுத்தல்கள், விதப்புரைகள் ஆகியவற்றையும் வழங்குகின்றது. அறிக்கை தயாரிப்புக் குழுவில் விஜயானந்த ஜயவீர (மதியுரைஞர்), கருணாரத்தின பரணவிதான (ஆலோசகர்), ரங்க கலன்சூரிய (ஆலோசகர்), பிரதீப் என்.வீரசிங்க(குழுத்தலைவர்), நாலக்க குணவர்த்தன (மதியுரை ஆசிரியர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழாக்கப் பிரிவில், ரஜீவன் அரசரத்தினம், சிவப்பிரியா ஸ்ரீராம், கிருத்திகா தர்மராஜா, நாகபூஷணி, எம்.எஸ்.எம்.அயூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்;. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24839).

மேலும் பார்க்க: 13006>14A08>

ஏனைய பதிவுகள்

12582 – புதிய விஞ்ஞானம் ஆண்டு 10 பகுதி 1.

. கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). viii, 139 பக்கம், விளக்கப்படங்கள்,

14549 சமாதானம்: தேசிய கல்வியியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கான இலக்கியப் போட்டி எழுத்தாக்கங்கள் 2002.

தொகுப்புக் குழு, சிபில் வெத்தசிங்க (சித்திரங்கள்). கொழும்பு: ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகம், 1வது பதிப்பு, 2002. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன). (9), 10-96 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14714 மனுஷ்யா.

முகில்வண்ணன். (இயற்பெயர்: வேலுப்பிள்ளை சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், நெசவுநிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, மார்கழி 2017. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம்). x, 11-108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.,

14742 இந்த மண்ணும் எங்களின் சொந்த மண் தான்.

இணுவில் ஆர்.எம். கிருபாகரன். சென்னை 600037: இராமநாதன் பதிப்பகம், நெ.25, 3வது தெரு, ஆபீசர்ஸ் காலனி எக்ஸ்டென்ஷன், முகப்பேர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xvi, 160 பக்கம், விலை:

14757 கலிங்கு 2003-2015 (நாவல்).

தேவகாந்தன். சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 644 பக்கம், விலை: இந்திய ரூபா 550., அளவு: