றமீஸ் அப்துல்லா. சம்மாந்துறை: றமீஸ் அப்துல்லா, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi 271 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: : 978-955-38975-0-3.
இதில் தினகரன் பத்திரிகையில் வாராவாரம் எழுதிய 102 பத்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அன்றாடம் முக்கியத்துவம் பெறுகின்ற அரசியல் நிகழ்ச்சிகள், இலக்கிய நினைவுகள், சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், சமய, இன, கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கின்ற சமாச்சாரங்கள், அன்றாடம் காணுகின்ற காட்சிகள், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்ற நினைவுகள், இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்தமான பதிவாக இந்நூல் அமைந்திருக்கிறது.