13034 மனிதரில் எத்தனை நிறங்கள்.

வைரமுத்து சிவராஜா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், Am Windhovel 18a, 47249 Duisburg47249, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக விபரம் தரப்படவில்லை).
165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

தன் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத சில மனிதர்களை, அவர்களின் மனங்களை ஊடுருவிக் கண்டறிந்த அவர்களின் நல்லியல்புகளை இத்தொகுப்பிலுள்ள ஐம்பது சொல்லோவியங்களின் வழியாகப் பதிவுசெய்திருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தின் நாவற்குழி- கிழக்கு, வேலம்பராய் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின்னர் முல்லைத்தீவில் வாழ்ந்து, ஜேர்மனியில் கடந்த 35 வருடங்களாகப் புகலிடம் கண்டவர் இநநூலாசிரியர். யாழ். ஈழநாடு பத்திரிகையின் வன்னிப் பிராந்தியச் செய்தியாளராகப் பணியாற்றியவர். கடந்த 30 ஆண்டுகளாக ஜேர்மனியில் மண் என்ற மாதசஞ்சிகையை தொய்வின்றி நடத்தி வருகிறார். அதன் மூலம் தாயகத்து உறவுகளுக்கு பணஉதவி வழங்கியும் வருகின்றார். இவரது கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மை வாய்ந்தவை. அத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். இந்தப் பின்னணியிலேயே இச்சொல்லோவியங்களுக்கான கருக்களைப் பெற்றுள்ளார். பெற்றோரே என் தெய்வங்கள், வழிகாட்டிகள், ஆசிரியப் பெருந்தகை, பகுத்தறிவாளர், பிரதேச காரியாதிகாரி, சாதாரண மனிதர், படைப்பாளி, மக்கள் சேவையே மகேசன் சேவை, சைவப் பிரியர், உடுவை என்ற உயிர்ப்புள்ள மனிதன், குளப்படிப் பையன், நாற்பது ஆண்டுகள் கடந்த நட்பு என இன்னோரன்ன தலைப்புகளில் தனது வாழ்வனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Finn den beste listen 2023

Da regner gedit ikke og et casinospill som påslåt helt Keno, hvilken har RTP for rundt 70 %. En av disse viktigste er at transaksjonene