சோ.கிருஷ்ணராஜா (மூலம்), வ.இன்பமோகன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 330 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-529-1.
இந்நூல் மெய்யயிலின் ஆரம்பகால வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டு, டேக்காட் (Descartes), ஸ்பினோஸா (Spinoza), லைப்னிட்ஸ் (Leibniz), லொக் (Locke), பார்க்ளி (Berkeley), ஹ்யூம் (Hume), காண்ட் (Kant) ஆகிய நவீன மெய்யியலாளர்களின் மெய்யியல் சிந்தனைகளை விளக்குமொன்றாக விளங்குகிறது. பிளேற்றோ, அரிஸ்டோட்டில் ஆகியோரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றி, பகுத்தறிவுக் கொள்கை பற்றிய பிரச்சினைகள் டேக்காட்டினால் ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. இக்கொள்கையை ஸ்பினோஸா, லைப்னிட்ஸ், ஆகியோர் வளர்த்தெடுக்கின்றனர். இதற்கு மாற்றான சிந்தனை மரபாக விளங்கிய அனுபவவாதத்தை முன்வைத்தவர்களாக லொக், பார்க்ளி மற்றும் ஹ்யூம் ஆகிய மூவரும் விளங்குகின்றனர். மேற்குறித்த பகுத்தறிவுக் கொள்கை, அனுபவவாதம் ஆகியவற்றின் குறைபாடுகளைக் கண்டறிந்து எடுத்துக்காட்டி ஆய்வுமுறைத் தத்துவத்தின் இன்றியமையாமையை காண்ட் வலியுறுத்தியதுடன் இவ்விரு கொள்கைகளையும் இணைக்கவும் முற்பட்டார். மேற்குறித்த மெய்யியல் சொல்லாடலை ஐரோப்பிய மெய்யியல் வரலாறு என்னும் இந்நூலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியரான பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா எடுத்துக்கூறுகின்றார்.