அகணி சுரேஸ். கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரி ஸ்மார்ட் சொலியூசன்).
123 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13சமீ., ISBN: 978-0-9869016-6-9.
கனடாவில் வெளிவரும் ‘விளம்பரம்’ பத்திரிகையில் 01.09.2014 முதல் 01.09.2015 வரையிலான 25 இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் திருக்குறள் (முதல் பத்து அத்தியாயங்கள்), திருமந்திரம் (11ஆம் அத்தியாயம்), திரிகடுகம் (12ஆம் அத்தியாயம்), நன்னெறி (13-14ஆம் அத்தியாயங்கள்;) மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் (15-25ஆம் அத்தியாயங்கள்) ஆகியவற்றில் இடம்பெற்றிருக்கும் அன்புடைமை பற்றிய கருத்தக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சிரிப்பு பற்றிய விஞ்ஞான அணுகுமுறைகள் மூன்று அத்தியாயங்களில் (15-17) விளக்கப்பட்டுள்ளன. அன்பு செலுத்துவதால் உடல்நலத்திற்கு எவ்வாறு உதவமுடியும் என்பதையும், மன அழுத்தம், புற்றுநோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கும், விவாகரத்துக்கள், மணமுறிவுகளுக்கும் அன்புசெலுத்தல் என்பது எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துகின்;றது என்பதையும் இந்நூல் விஞ்ஞானபூர்வமாக விளக்குகின்றது. இந்நூலாசிரியர் மெல்பேர்ண் மணி என்ற புனைபெயரில் எழுதிவந்த எழுத்தாளர் திருமதி அ.கனகமணி அவர்களின் மகனாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62300).