13041 வாழ்வியல் : அனுபவ பகிர்வு பாகம் 2.

வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572 A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (திருக்கோணமலை: A.R.Traders, திருஞானசம்பந்தர் வீதி).

162 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-98979-4-1.

திருக்கோணமலைப் படைப்பாளி, வீ.என்.சந்திரகாந்தியின் வாழ்வியல் அனுபவங்களின் பதிவாக இந்நூல் வெளிவந்துள்ளது. தனது எழுபது வருட வாழ்க்கைப் பயணத்தில் தான் எதிர்கொண்ட சவால்கள், அடைந்த வெற்றிகள், சறுக்குண்ட சம்பவங்கள் தனது ஆழ்மனதில் பதிந்தவை அனைத்தையும் ஒரு நாவலாசிரியனுக்கேயுரிய சுவையுடன் சொல்லியிருக்கிறார். திருக்கோணமலையிலிருந்து வெளிவரும் மலைமுரசு, ஒளி அரசி ஆகிய இதழ்களில் காலத்திற்குக் காலம் எழுதப்பட்டவை. கலாபூஷணம் வீ.என்.சந்திரகாந்தி அவர்கள் ஏற்கனவே மூன்று சிறுகதைத் தொகுப்புக்களையும் ஒரு நாவலையும் வாழ்வியல்: அனுபவபகிர்வு (பாகம் 01) கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டவர். சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அடையாளம் காட்டும் வகையிலும் 31 கட்டுரைகள் இந் நூலில் உள்ளடங்கியுள்ளன. இன்று தமிழ் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளில் இளைஞர்களும் யுவதிகளும் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்கு இந் நூல் வழி காட்டுகின்றது. ஞானம் பிரதம ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களின் வாழ்த்துரையுடன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.எஸ்.எஸ். லதாமங்கேஸ் அவர்களின் முகவுரை நூலை அலங்கரிக்கின்றன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  24893). 

ஏனைய பதிவுகள்

United states Online casino

Blogs Bonuses On the Finest Online casinos Which are the Easiest Peruvian Casino Sites? Type of Rng And you will Real time Gambling games Poker: