கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஜுன், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
vi, 70 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5ஒ18.5 சமீ.
இந்நூலானது, பாடசாலைகளில் சீர்மிய நடவடிக்கை தொடர்பான அதிபர்களுக்கான விழிப்புணர்வுக் கைந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் ஏஐஏழு நிறுவனத்தின் உதவியுடன் அதிபர்களின் உயர்மட்டப் பயிற்சி நெறிக்காக வலிகாமம் கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உள ஆரோக்கியம், நெருக்கீட்டு நிலைகளில் ஏற்படும் பொதுவான உளப்பிரச்சினைகள், நெருக்கீடுகள் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், ஆசிரியர்களும் உளவளத்துணைச் செயற்பாடும், உளவளத்துணைச் செயற்பாட்டில் பாடசாலை அதிபரின் வகிபங்கு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.