செல்லத்தம்பி சிறீக்கந்தராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
207 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-659-615-1.
ஒளவையார் அருளிச்செய்த மூதுரை, நல்வழி, ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஆகிய நன்நெறிச் செய்யுள்களை முழுமையாக வழங்குவதுடன் ஒவ்வொரு செய்யுளுக்குமான ஆங்கிலமொழியில் வாசிப்பதற்கேற்ப ஒலிபெயர்ப்பையும் (Transliteration), ஆங்கில மொழி வசனநடையில் அச்செய்யுளின் விளக்கமான கருத்தையும், அதே செய்யுளுக்கான தமிழில் எழுதப்பெற்ற தெளிவான, எளிமையான பொழிப்புரையையும் நூலாசிரியர் வழங்கியுள்ளார். தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்கும், தமிழ் அறியாதவர்களுக்கும், குறிப்பாக, புலம்பெயர் தமிழரின் இரண்டாம் தலைமுறையினருக்கும் ஏற்றவகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.