திருச்செல்வம் தவரத்தினம் (உரையாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்).
(3), 13 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18×12 சமீ.
கருத்துச் செறிவுமிக்க மனித விழுமிய மகாவாக்கியம் உலகநாதர் என்ற முருகபக்தர் அருளிய உலகநீதியாகும். 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் 13 விருத்தப்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் முருகனை வாழ்த்தி முடிவதாக அமைந்துள்ளது. இந்நூல் கூறும் அறிவுரைகள் ‘எதனைச் செய்ய வேண்டாம்’ என்பதை எதிர்மறையாக தெரிவிப்பதாக அமைந்துள்ளன. உதாரணமாக ‘ஒவ்வொரு நாளும் ஓதுங்கள்’ எனச் சொல்வதற்காக ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று கூறுகிறார். இவ்வாறு ‘ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்’ என அமைவதே உலகநீதியின் இரண்டாவது வாசகமாகும். நூலாசிரியர் உலகநீதிக்கு உரைவிளக்கம் அளித்துள்ளார்.