13053 ஒளவை மொழி.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, சித்திரை 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).

iv, 70 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ.

அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக ஒளவையார் பாடல்களைத் தொகுத்து நூலுருவில் வெளியிடும் முயற்சி இதுவாகும். ஒளவை மொழி என்ற முதலாவது பகுதியில் ஒளவையின் அவதாரம், ஒளவை மூதாட்டியானார், நாலுகோடி கவிகள், ஒளவையாரும் முருகப் பெருமானும், கருத்தால் உயர்ந்த திருமண வாழ்த்து, பொன் ஊஞ்சலின் சங்கிலிகள் நான்கும் அறப்பாடியது, தனிப்பாடல்கள், விநாயகரும் ஒளவையாரும் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் பகுதிகளில் விநாயகர் அகவல், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, கல்வி ஒழுக்கம் ஆகியன தனித்தனி பிரிவுகளில் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. இணுவையூர் கலாபூஷணம் மூ.சிவலிங்கம் அவர்கள் எழுதிய 22ஆவது நூல் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62087).

ஏனைய பதிவுகள்