இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: சிவபாலன் தேவகுமாரி, சுகர்யா வெளியீட்டகம், Neuedorf Str 30, 8135, Langnau,1வது பதிப்பு, ஆடி 2012. (சுன்னாகம்: முத்து பிறின்டர்ஸ், காங்கேசன்துறை வீதி).
xiv, 398 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
ஆதித் தமிழர் ஆக்கிவைத்த அருந்தமிழ் அறநூல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. திரு.சிவபாலன்-திருமதி தேவகுமாரி தம்பதியரின் மகள் சகர்யா சிவபாலனின் மங்கல நன்னீராட்டு விழாவின் போது வழங்கப்பட்ட நூல். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேட்கை, உலக நீதி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், ஆசாரக் கோவை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, சிறுபஞ்ச மூலம், பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நாலடியார், திருக்குறள் ஆகிய அறநூல்கள் இங்கு தொகுத்துப் பெருநூலாக்கித் தரப்பட்டுள்ளன.