அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், கு.றஜீபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xvi, 220 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7331-15-7.
30.08.2019 அன்று வடமாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினர் ஒழுங்குசெய்திருந்த திருக்குறள் வாரம் நிகழ்ச்சியையொட்டி வெளியிடப்பட்ட ஐந்து நுல்களில் இதுவும் ஒன்றாகும். இந்நூலில் திருக்குறளின் தத்துவத் தளம் குறித்த விசாரணையில் அறிவாராய்ச்சியியலின் பயில்நிலை (ச.முகுந்தன்), கல்வியியல் தத்துவங்களின் நோக்கில் வள்ளுவம் (வை.விஜயபாஸ்கர்), திருக்குறளில் உவமை: காமத்துப்பாலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (ஸ்ரீ பிரசாந்தன்), ஒரு குறள் பலபொருள்-குறள் 336ஐ பொருள்கோடல் செய்தல் (இ.சர்வேஸ்வரா), திருக்குறளில் பிள்ளை நலன் கொள்கைகள் (த.அஜந்தகுமார்), வள்ளுவனின் வாழ்க்கைத் துணை (பாலசிங்கம் பாலகணேசன்), திருவள்ளுவரின் சிந்தனைத் தளங்கள் அறத்துப்பால் திருக்குறள்கள் வழி ஒரு பயணம் (வேல் நந்தகுமார்), திருக்குறள் காட்டும் மனிதநேயம் (தர்மினி றஜீபன்), திருக்குறள் மொழிபெயர்ப்புகள் (தமிழ்நேசன் அடிகளார்), ‘தம்பொருள் என்ப தம்மக்கள்” திருக்குறளின் ஊடான ஒரு நோக்கு (செல்வ அம்பிகை நந்தகுமாரன்), திருக்குறளும் நீதி சதகமும்-ஓர் ஒப்பாய்வு (ச.பத்மநாபன்), திருக்குறளில் அறிவியல் சிந்தனைகள் (விக்னேஸ்வரி பவநேசன்), ‘உடையர் எனப்படுவது ஊக்கம்’ திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது (சி.ரமணராஜா), தனிமனித ஆளுமை விருத்தியில் வள்ளுவரின் சிந்தனைகளின் செல்வாக்கு-ஓர் ஒப்பாய்வு (சந்திரமௌலீசன் லலீசன்), களவியலின் வாயிலாகத் தகை அணங்கு உறுத்தல்-சிறு உசாவல் (கு.பாலசண்முகன்), திருக்குறளில் ஈற்றுச் சீர் (ச.மார்க்கண்டு), திருக்குறளில் பிறன் இல் விழையாமை (அகளங்கன்), ஞாலத்தின் மாணப் பெரிது (ச.மனோன்மணி), கள்ளினும் இனிது காமம் (கு.றஜீபன்) ஆகிய 19 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.