ஸ்ரீ.பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்துமத அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5சமீ., ISBN: 978-955-9233-78-7.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஐந்து நூல்களில் இரண்டாவதாகும். இதில் உலகநாதரால் இயற்றப்பெற்ற உலகநீதி, ஒளவையாரால் இயற்றப்பெற்ற மூதுரை ஆகிய ஒழுக்கவியல் நூல்கள் இரண்டும் இடம்பெற்றுள்ளன. உலகவாழ்க்கைக்கு இன்றியமையாத நீதிகளை எடுத்துக்கூறும் பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட உலகநீதி பிற நீதி நூல்கள் பலவற்றைக் காட்டிலும் மிக எளிமையானது. உரையில்லாமலே அனைவரும் புரிந்துகொள்ளக் கூடிய எளிமையான பாடல்களைக்கொண்டது. ஒளவையாரின் மூதுரை கடவுள் வாழ்த்து நீங்கலாக முப்பது வெண்பாக்களைக் கொண்டது. ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ என்று தொடங்கும் காப்புச் செய்யுளைக் கொண்டதால் இதனை (மூதுரையை) வாக்குண்டாம் என்றும் அழைப்பர்.