நாவலர் நற்பணி மன்றம். கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல 36, நந்தன கார்டின், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
119 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.
இந்நூலில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி, உலகநீதி ஆகிய நீதிநூல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நீதிநூல்களின் மூலமும் அவற்றுக்கான பதவுரையும், கருத்துரையும் மாணவர்களின் வாசிப்புக்கு எற்றவாறு இலகுநடையில் விளக்கப்பட்டுள்ளன. ஆத்திசூடியில் 108 நூற்பாக்களும், கொன்றைவேந்தனில் 91 நீதி மொழிகளும், மூதுரையில் முப்பது வெண்பாக்களும், நல்வழியில் 40 பாக்களும், வெற்றிவேற்கையில் 82 செய்யுள்களும், நன்னெறியில் 40 நேரிசை வெண்பாக்களும், உலக நீதியில் பதின்மூன்று பாக்களும் உள்ளன.