தம்பிப்பிள்ளை சிவப்பிரகாசம். கொழும்பு 6: த.சிவப்பிரகாசம், 44/4, 4/2, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14சமீ.
திரு.த.சிவப்பிரகாசம் ஆன்மீக நாட்டம் கொண்ட பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் உறுப்பினராவார். தான் பெற்ற ஞானத்தையும் தேடல் மூலம் அறிந்தவற்றையும் கலந்து சிறு ஒழுக்கவியல் கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். பரிசுத்தப்படு பரிசுத்தப்படுத்து, ஓய்வுகாலம், தெய்வீகம், பொறுப்புணர்வு, மனம்போல் வாழ்வு, முறைப்பாடு, குறை காணலாமா?, வன்முறை ஏன்?, திருடலாமா?, ஏன் பொய் பேசுகின்றோம்?, ஏமாற்றாதே, நேரத்தின் மதிப்பும் நேர்மையின் மதிப்பும், பழிக்குப்பழி, பழக்கங்கள், செத்தவன் போல் இரு, வரிசையை முறியாதே, இப்பொழுதில்லையேல் எப்போது?, பொருளா அருளா நிம்மதியா?, எண்ணம் பேச்சு செயல், பழமும் வேரும், மண்ணோடு மண், ஒப்பந்த வாழ்க்கை, மாயை, முற்றுப்புள்ளி, நிம்மதியைத் தேடி, ஆத்மீக விஞ்ஞானமும் பௌதிக விஞ்ஞானமும், சொந்தம் என்றால், வாழ்க்கை வாழ்வதற்கே, அச்சமும் கவலையும், எண்ணத்தின் வலிமை, சேவை மனப்பான்மை, நாம் யார், விதியும் மதியும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62083).