இரத்தினசபாபதி புண்ணியமூர்த்தி. யாழ்ப்பாணம்: இரத்தினசபாபதி புண்ணியமூர்த்தி, நெட்டிலைப்பாய், கோண்டாவில், 1வது பதிப்பு, மார்ச் 2018. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
206 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ.
இலங்கையின் தேசிய தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் நேர்காணல்கள் இவை. இந்நூலின் ஆசிரியர் ஆன்மீக அறிவினைத் தான் பெறுவதுடன் நில்லாமல் மற்றவர்களையும் பெறவைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது மனதில் ஆன்மீகம் பற்றி எழுந்த ஐயங்களைத் தக்கோரிடம் கேட்டு அவர்கள் தரும் பதில்களை எல்லோரும் அறிந்து உய்தி பெறும் வகையில் செய்தித் தாள்களில் அவற்றை வெளியிட்டு வந்தவர். அவை 23 நேர்காணல்களாகத் தொகுக்கப்பெற்று இங்கு நூலுருவாகியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63001).