13074 இந்திய மெய்யியல்.

எம்.ஹிரியண்ணா (ஆங்கில மூலம்), வ.ஆ.தேவசேனாபதி, வ.நா.ஷண்முகசுந்தரம் (தமிழாக்கம்), சோ.கிருஷ்ணராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி).

(10), 466 பக்கம், விலை: ரூபா 395., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-115-x.

எம்.ஹிரியண்ணா மைசூர் பல்கலைக்கழகத்தில் தான் நிகழ்த்திய பல ஆண்டுக்கால விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு 1932இல் ழுரவடiநௌ ழக ஐனெயைn Phடைழளழிhல என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அதனை சென்னை அரசின் தமிழ் வெளியீட்டுக் கழகத்தினரின் வேண்டுகோளின் பேரில் கலாநிதி வ.ஆ.தேவசேனாபதி, ப.நா.ஷண்முகசுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து 1966இல் மொழிபெயர்த்திருந்தார்கள்.  இலங்கையில் தமிழ் மொழிமூலம் மெய்யியல் கற்கவிளையும் பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டிற்காக இத்தமிழ் மொழிபெயர்ப்பினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறைத் தலைவர் சோ.கிருஷ்ணராஜா பதிப்பித்து மீளவும் வெளியிட்டுள்ளார். இந்நூலில் வேதகாலம் (உபநிடதத்திற்கு முற்பட்ட சிந்தனை, உபநிடதங்கள்), வேதத்தை அடுத்த காலத்தின் முற்பகுதி (பொதுப் போக்குகள், பகவத் கீதை, முற்கால பௌத்தம், சமணம்), தரிசனங்களின் காலம் (புது முகம், சடக் கொள்கை, பிற்காலப் பௌத்தம், நியாயவைசேடிகம், சாங்கிய யோகம்,  பூர்வ மீமாம்சை, வேதாந்தம்-அத்வைதம், வேதாந்தம்-விசிஷ்டாத்வைதம்) ஆகிய காலப்பிரிவுகளின் அடிப்படையில் இந்திய மெய்யியல் விளக்கப்பட்டுள்ளது. (இதே நூல்  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடாக 2005இல் வெளியிடப்பட்டுள்ளது. நூல்தேட்டம் பதிவிலக்கம் 7045).

ஏனைய பதிவுகள்

Inspection france Golden félin

Aisé Casinos avec endroit Jeu Dans Comédien Casino un brin Golden Fauve Casino IM Concentration, un programme titrée Golden Tiger Slots continue disponible par rapport