சு.வித்தியானந்தன். சுன்னாகம்: சைவ மங்கையர் சபை, இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1986. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ். அச்சகம்).
7 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.
20.09.1986 அன்று நிகழ்த்தப்பெற்ற லீலாவதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப் பேருரையின் எழுத்து வடிவம் இது. அமரர் சேர்.பொன் இராமநாதன் அவர்களால் 1924ஆம் ஆண்டில் சைவமங்கையர் சபை நிறுவப்பட்டது. அதன் தலைவராக விளங்கியவர் லீலாவதி இராமநாதன் பெருமாட்டி அவர்கள். சைவப் பெண்களின் மேம்பாட்டின் பொருட்டு அமைக்கப்பட்ட இச்சபை இன்றுவரை நிலைத்து நின்று நற்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றது. லீலாவதி இராமநாதன் அவர்களுடைய பணிகளை நினைவுபடுத்துமுகமாக, சைவ மங்கையர் சபையினர் இரண்டு அறக்கட்டளைகளை நிறுவியுள்ளனர். இந்து நாகரிகத்தில் முதுகலைமாணி, கலாநிதிப் பட்டங்கள் பெறுவோருக்குத் திறமை அடிப்படையில் ஒரு புலமைப்பரிசில் வழங்கவும், ஆண்டுதோறும் இந்து நாகரிகம், சைவ சமய தத்துவம், கலை, கலாசாரம் ஆகிய துறைகளில் நினைவுப்பேருரையொன்று நிகழ்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வகையில் 1986ஆம் ஆண்டின் நினைவுப்பேருரை வழங்கியவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4375/18433).