நடராசர் சிவபாலகணேசன். கொழும்பு: திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்தப் பயிற்சி மையம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 62 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21×15 சமீ.
மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கில், மெய்கண்டாரோடு கூடிய உரையாடல் வடிவாக எழுந்த நூல்கள் இரண்டாகும். அவை அருணந்தியாரின் இருபா இருபதும், மனவாசங் கடந்தாரின் ‘உண்மை விளக்கம்’ என்பவையாகும். நடராச மூர்த்தத்தின் பொருளும் இன்னும் பல தத்துவ விளக்கங்களையும் மெய்கண்டார் அருளியவாறு விளக்கும் சிறப்பினதாக ‘உண்மை விளக்கம்’ எனும் இந்நூல் விளங்குகிறது. இந்நூலுக்கான உரைகளை பல்வேறு காலகட்டங்களிலும் சைவசித்தாந்திகள் வழங்கிவந்துள்ளனர். அவ்வகையில் சித்தாந்த ரத்தினம், திருமுறைநெறிச் செல்வர் ஆகிய பட்டங்களைப் பெற்ற விரிவுரையாளர் சிவபாலகணேசன் அவர்கள் கேள்வி-பதில் உருவத்தில் ஆறுமுக நாவலரைப் பின்பற்றி இந்நூலை சைவசித்தாந்த மாணவர்களின் அறிகைக்காக எழுதியுள்ளார். (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24932).