க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: க.கனகராசா, மில்க்வைற் தொழிலதிபர், திரு ஆலவாய், 1வது பதிப்பு, ஜுன் 1981. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இது உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம்ஆகியவற்றுக்கு அகலஉரை எழுதியவரான சங்கராசாரிய சுவாமிகள் செய்த ‘ப்ரச்நோத்ர ரத்தின மாலிகா’ என்னும் ஆன்மீக நூலைத் தழுவி வினா-விடை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இந்துமதம், சனாதன தர்மம், பாரதப் பண்பாடு, என்பவை சம்பந்தமாக மனு, சுக்கிரர், பத்துருஹரி, விதுரர், சங்கரர் என்ன சொன்னார்கள் எனபதை இந்நூல்வழியாக வாசகர் அறிந்துகொள்ள முடிகின்றது. சங்கரர் ஞானம், கர்மம், பக்தி என்பனவற்றைத் தழுவிய ஞானமார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்னும் மூன்று வழிகளையும் முறையாகக் கூறி மக்களை நெறிப்படுத்தியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2587).