கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1914. (கொழும்பு: குமரன் அச்சகம்).
xxvi, 235 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21.5×14 சமீ.
ஸ்ரீ மந்திரேசுவர முனிவர் வடமொழியில் இயற்றிய சோதிட நூலான பலதீபிகையின் தமிழ்ப் பதிப்பு இது. மிளசை பிரமஸ்ரீ வேங்கட கிருஷ்ணையரவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ ஞானியார் மடாலயம் ஸ்ரீமத் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய ஸ்வாமிகளால் பார்வையிடப்பெற்றது. பறங்கிப்பேட்டை சு.ஏ.குமாரஸ்வாமி ஆச்சாரியாராலும் ப.அ.கிருஷ்ணஸ்வாமிப் பிள்ளையாலும் கொழும்பில் பதிப்பிக்கப்பெற்றது. ஸ்ரீ மந்திரேசுவர முனிவர், பராசரர், ஆரிய ஸ்ரீபதி, சத்யாசாரியர், அத்திரி, மணித்தர், சாணக்யர், மயன் முதலியஆன்றோர் பலரின் நூல்களையும் துணையாகக் கொண்டு 900 சுலோகங்களைக் கொண்ட இந்நூலை உருவாக்கியுள்ளார்.