13084 இறை தேடல்.

டேவிட் வி.பற்றிக். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 14: ட்ரான்சென்ட் பிறின்ரர்ஸ் லிமிட்டெட்).

(4), 72 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் பங்குத் தந்தையாக விளங்கும் ஆசிரியர் எழுதியுள்ள ஆன்மீகம் சார்ந்த இந்நூல், விவிலிய விளக்கங்களை பொதுநிலையினருக்கும் துறவியருக்கும் விளக்கும் வகையில் எளிமையான தமிழில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைக் கொண்டது. புதுவாழ்வில் புதுப்பயணம், இறைவனின் பேரன்பு, இறைவார்த்தையில் நிறைவாதல், நற்செய்தி நவிலல், என்றுமே நன்மை செய்பவர், மலைப்பொழிவு, விண்ணரசின் விழுமியங்கள், மீட்பும் விடுதலையும், அருட்சாதன விடுதலை வாழ்வு, ஏழ்மையும் எழுச்சியும், பேறு பெற்ற பெண் மரியா ஆகிய பதினொரு இறையியல் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்