எம்.மார்க் அல்ரோய் (இயற்பெயர்: மார்க் அல்ரோய் மஸ்கிறேஞ்ஞ Mark Alroy Mascrenghe). கொழும்பு: தோமஸ் மில்டன் பதிப்பகம், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (வத்தளை: கிறேஸ் கிராப்பிக்ஸ், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை).
xxi, 164 பக்கம், தகடுகள், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7772-04-2.
இந்த விளக்கவுரை ரூத்தின் ஒவ்வொரு வேதப் பகுதியையும் சுருக்கம், பொருத்தம், விளக்கம், மேலதிக குறிப்புகள் என நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கின்றது. வாசகரின் வசதி கருதி வேதப்பகுதிகள் (பந்திகள்) தரப்பட்டுள்ளன. சுருக்கப் பகுதியில் அந்த வேதப் பகுதியின் அர்த்தம் எவரும் வாசித்து விளங்கிக்கொள்ளக் கூடியதாக சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. விளக்கத்தை எளிதாக்கும் நோக்கில் வாழ்க்கைப் பிரயோகங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. பின்னணிப் பகுதியில் சரித்திரப் பின்னணியையும் கதையோடு சம்பந்தப்பட்ட பிற தகவல்களையும் காணமுடிகின்றது. விளக்கப் பகுதியில் குறிப்பிட்ட வேதப் பகுதிக்கான விளக்கங்களும் வாழ்வில் அதன் பிரயோகங்களும் தரப்பட்டுள்ளன. ஏன் என்ற கேள்விக்கு இங்கே விடை காணப்பட்டுள்ளது. கூடுதல் குறிப்புப் பகுதியில் இறையியல் மாணவர்களுக்குத் தேவையான ஆராய்ச்சித் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சொல்லோவியம் பகுதியில் சொற்களின் அர்த்தம், வரலாறு, அது பாவிக்கப்பட்டுள்ள முறை போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புப் பகுதியில் தமிழ் மொழிபெயர்ப்பின் குறை நிறைகளும் ஏன் அவ்வாறு மொழிபெயர்க்க நேர்ந்தது என்பன போன்ற தகவல்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச தமிழ் பழைய ஏற்பாட்டு விளக்கவுரைகள் என்ற தொடரில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதாகம மேற்கோள்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கத்தினால் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமத்திலிருந்து (பழைய மொழிபெயர்ப்பு) எடுக்கப்பட்டிருக்கின்றன.