13086 புனித சின்னப்பர் எழுதிய திருமுகங்கள்.

யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இலக்கியக் கழகம். யாழ்ப்பாணம்: யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் அறியமுடியவில்லை).

481-755 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

திருத்தூதர்கள், திருச்சபைத் தலைவர்கள் ஆகியோர் அக்காலத் தேவைகளின் அடிப்படையில் எழும் கேள்விகளுக்கு விடையளிக்கவும், மாற்றுக் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்கவும், மக்களை இறைநம்பிக்கையில் வலுவடையச் செய்யவும் திருமுகங்களை எழுதினர். அவை குறிப்பிட்ட தலத் திருச்சபைக்கு எழுதப்பட்டவை போலத் தோன்றினாலும் சுற்றுமடல்களாகவே கருதப்பட்டன. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பிறந்த புனித சின்னப்பர் (பவுல்) எழுதிய திருமுகங்கள் அவை எழுதப்பட்ட காலத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அவற்றின் அளவைக் கொண்டே கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டு நூல் அமைப்பில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டுத் திருமுகங்களுள் பல புனித சின்னப்பரோடு தொடர்புபடுத்தப் பட்டுள்ளன. அவற்றுள் சில அவரே நேரடியாக எழுதியவை. மற்றவை அவருடைய சிந்தனை அடிப்படையில் எழுந்தவை. பவுல் எழுதிய திருமுகங்களை அவரது வாழ்க்கைப் பின்னணியில் படிக்கும்போது கிறிஸ்தவ உண்மைகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்தம் திருமுகங்கள் வாயிலாகவும் திருத்தூதர் பணி நூல் மூலமாகவும்தான் அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் அறிகிறோம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85115).  

ஏனைய பதிவுகள்

14787 பாலைவனத்துப் புஷ்பங்கள் (நாவல்).

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 78 பக்கம், விலை: ரூபா