13099 கால ஆய்வில் சிக்கித் தவிக்கும் மாணிக்கவாசகர் சுவாமிகள்.

தனபாக்கியம் குணபாலசிங்கம். லண்டன் E12 6SW: திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம், இலக்கம் 6, ஷெல்லி அவென்யு, மனர் பார்க், ஈஸ்ட்ஹாம், 1வது பதிப்பு, பங்குனி 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xii, 13-92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-44186-0-8.

வழமைபோன்று தமிழ் வரலாற்றுக் கால ஆய்வுகள் சற்றுக் கடினமானவையாயினும், ஆசிரியர் தம் ஆய்வு நுணுக்கங்கள் மூலம் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தினை கி.பி. 3ஆம் நூற்றாண்டெனக் கணிப்பீடு செய்துள்ளார். அதற்கான சான்றாதாரங்களை அவர் பக்திவசப்பட்டு பாடியுருகிய திருவாசகப் பாடல்களில் இருந்தே எடுத்துக்காட்டுவதன் மூலம் ஏற்கெனவே மாணிக்கவாசகரின் கால ஆய்வினை மேற்கொண்டிருந்த மறைமலையடிகள், ஜி.யூ.போப், கா.சுப்பிரமணியபிள்ளை, அ.சிதம்பரனார் முதலானோரின் (கி.பி.3ஆம் நூற்றாண்டென்று நிறுவிய) முடிவுகளை இவர் மீண்டும் உறுதி செய்து, அவர்கள் ஆய்வுகளை உயிர்ப்பித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாது, இறைவனே மாணிக்கவாசகரைக் கருவியாகக் கொண்டு பாடுவித்த கோவை, அகப்பொருளைத் தெய்வீகக் காதல் கொண்டு பாடப்பட்டதெனவும் கூறி, கோவையின் இரு பக்கங்களையும் அறிதல் மூலம் இறைவனை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதையும் உணர்த்தியுள்ளார்.

ஏனைய பதிவுகள்