13100 கி.பி.19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இந்து சமயம்.

ப.கணேசலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 156 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-659-568-0.

இந்நூலில் ஈழத்திற் சைவம், (க.சொக்கலிங்கம்), 19ஆம் நூற்றாண்டின் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சி (க.அருமைநாயகம்), ஈழத்தில் இந்து இலக்கியங்கள்: 19ஆம் நூற்றாண்டு வரை (கலையரசி சின்னையா), ஈழத்துப் புராணங்கள் (பொ.பூலோகசிங்கம்), ஈழத்துத் தலபுராணங்கள் (கலையரசி சின்னையா), இலங்கை சித்தர் மரபு (ப.கணேசலிங்கம்), ஈழத்திற் சைவக் கிராமிய வழிபாடு (த.சண்முகசுந்தரம்), ஈழநாட்டிற் புராணபடனச் செல்வாக்கு (இரா.வை.கனகரத்தினம்), ஆங்கில அரசாங்கமும் சைவசமயக் கல்வியும்: 19ஆம் நூற்றாண்டு (க.அருமைநாயகம்), ஈழத்துச் சைவக் கல்விப் பாhரம்பரியம் (க.சி.குலரத்தினம்), 19ஆம் நூற்றாண்டின் இந்து சமயக் கல்வி மறுமலர்ச்சி (ப.சந்திரசேகரம்), 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் தோன்றிய சைவ சமய இயக்கங்கள்: 1840 முதல் 1870 வரை (இரா.வை.கனகரத்தினம்) ஆகிய பன்னிரண்டு கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக, இலங்கையிற் சைவர்கள்: குடிசனப் புவியியல் நோக்கு (பொ.பாலசுந்தரம்பிள்ளை), ஈழத்தில் சைவநூல் உரையாசிரியர்கள், சைவ சமய வளர்ச்சி தொடர்பாய் வெளிவந்த பத்திரிகைகள், இந்து ஆலய குடிசனத்தொகை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்