திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: ஆரணன் பிறின்ரேர்ஸ், மருதனார்மடம்).
(4), viii, 132 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12 சமீ.
சந்திரனைப் பற்றிய வரலாறு, சந்திர வழிபாடு, சந்திரனின் ஜோதி வடிவம், சந்திர வழிபாட்டு மந்திரங்கள், தேவார தோத்திரப் பாடல்களில் சந்திரன், குரு பூர்ணிமா, சந்திரனால் பூமியில் ஏற்படும் தாக்கங்கள், நவக்கிரக வழிபாட்டில் சந்திரன், மூன்றாம்பிறைச் சந்திரன், பௌர்ணமி, தைப்பூசமும் பௌர்ணமியும், மாசி மாதப் பௌர்ணமி, பங்குனி மாதப் பௌர்ணமி, சித்திரை மாதப் பௌர்ணமி, வைகாசி மாதப் பௌர்ணமி, ஆனி மாதப் பௌர்ணமி, ஆடி மாதப் பௌர்ணமி, ஆவணி மாதப் பௌர்ணமி, புரட்டாதி மாதப் பௌர்ணமி, ஐப்பசி மாதப் பௌர்ணமி, கார்த்திகை மாதப் பௌர்ணமி, மார்கழி மாதப் பௌர்ணமி, சோமவாரம், சந்திரனின் திருக்கோலத்தை உணர்த்தும் இறை வடிவங்கள், திருமந்திரத்தில் சந்திர யோகம், சித்தான்னம், சந்திரனுக்குரிய முத்து, சந்திரனும் சங்கும், சந்திர பகவானின் கிரக தத்துவங்கள், சோதிடரீதியாக சந்திரனின் பலன்கள், இராசியாக சந்திரனே அமைதல், சந்திரனால் கிடைக்கும் யோகங்கள், சந்திர அம்சத்தில் பிறந்த பலன், சந்திரனால் உண்டாகும் நோய்களுக்கான பரிகாரங்கள், சந்திர ஓரைப் பலன்கள், சந்திராஸ்டம நாள், வார சூனியம், சந்திர திசைப் பலன்கள், சந்திரன் நிற்கும் இராசியை லக்கினமாகக் கொண்டு இராசி சுத்தம், சந்திர கிரகணம், சந்திரனின் கிரக சேர்க்கைப் பலன்கள், இராசிகளில் சந்திரன் பெறும் ஆதிபத்தியம், லக்கினத்தில் சந்திர பலன்கள், இராசியில் சூரிய சந்திரர் நிற்கும் பலாபலன்கள் ஆகிய 44 தலைப்புகளில் இந்நூலில் சந்திர வழிபாடு பற்றி விளக்கப்பட்டுள்ளது.