சிவ சங்கர பண்டிதர் (மூலம்), ச.பொன்னுஸ்வாமி (தொகுப்பாசிரியர்). சிதம்பரம்: ச.பொன்னுஸ்வாமி, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 2வது பதிப்பு, ஹேவிளம்பி சித்திரை 1957, (சென்னை 1: நாவலர் வித்தியாநுபாலன அச்சகம், நெ.300, தங்கசாலைத் தெரு).
(6), 80+68+24 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 19×12.5 சமீ.
யாழ்ப்பாணத்து நீர்வேலி சிவ சங்கர பண்டிதர், நாவலர் காலத்தில் இருந்த தமிழறிஞர். நாவலரின் சைவத்தமிழ்ப் பணிகளில் துணைநின்றவர். நாவலரைப் போலவே இவரும் தனியாகச் சைவப் பிரசாரத்திலும் கிறிஸ்தவமதம் பரவுதலைத் தடுப்பதிலும் பேரூக்கமுடையவராக விளங்கியவர். இந்தியாவிலும் புகழ்பெற்றிருந்த முருகேச பண்டிதர், திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவான் சபாபதி நாவலர் ஆகியோர் இவரது மாணவர்களாவர். இவர் எழுதிய கிறிஸ்துமத கண்டனம், சற்பிரசங்கம், மிலேச்சமத விகற்பம் ஆகிய மூன்று பிரபந்தங்களையும் தொகுத்து இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. கிறிஸ்துமத கண்டனம் (1882இல் வெளியிடப்பட்ட இந்நூல் கிறிஸ்து மார்க்க நூல்களைக் கொண்டே அம்மார்க்கத்தைக் கண்டிக்கின்றது), மிலேச்சமத விகற்பம் (யூதமதம், கிறிஸ்துமதம், இசிலா மதம் பற்றியவை) ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து இப்பிரபந்தத் திரட்டு உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 03097).