கொழும்பு 4: இலங்கை பிரதேச அபிவிருத்தி, இந்துசமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, 1982. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).
16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15 சமீ.
சிவராத்திரி தினத்தையொட்டி வெளியிடப்பெற்றுள்ள இப்பிரசுரம் மும்மொழிகளிலும் இடம்பெறுகின்றது. ‘சிவராத்திரியே வதகத்கம’ என்ற சிங்கள மொழித் தலைப்புடனும், ‘Significance of Sivarathiri’ என்ற ஆங்கில மொழித் தலைப்புடனும் வெளிவந்துள்ளது. சைவர்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் சிவராத்திரி பற்றிய மும்மொழி விளக்கங்களுடன், சுன்னாகம் வரதபண்டிதர் இயற்றிய சிவராத்திரி புராணமும் இதில் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2976/3001).