க.சி.குலரத்தினம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 254 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-03-1.
சைவப்பெரியார் க.சி.குலரத்தினம் அவர்களால் எழுதப்பெற்ற சைவசமயம் தொடர்பான இந்நூல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் என்றும் துணைநிற்கும் கைந்நூலாகும். சைவ சமய வரலாறு, சைவத்திருமுறைகள், சமய குரவர்களின் வரலாறு, சைவசித்தாந்த சாத்திரங்கள், சித்தாந்த நூல்கள், சைவ சந்தானக் குரவர் வரலாறு, சைவசித்தாந்த தத்துவம், சைவ சாதனைகள், கிரியைகள், விரதங்கள், ஈழத்தில் சைவம், ஈழத்துச் சைவ ஆலயங்கள் எனப் பல விடயங்களை விபரிப்பதுடன் திருவருட் பாடல்களையும் உள்ளடக்குகின்றது. யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் பிறந்த க.சி.குலரத்தினம் (1916-1994) அவர்கள் பரமேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவராவார். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் திருநெல்வேலி சைவாசிரியர் பயற்சிக் கலாசாலையிலும் பயின்றவர். ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.